MARC காட்சி

Back
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
500 : _ _ |a

          இராமேசுவரம் திருக்கோயில் குருக்களான சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்கள் சேதுபதி மன்னர், இராமேசுவரம் திருக்கோயிலில் ஏற்படுத்தியுள்ள தேவர் கட்டளை சம்பந்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொண்டு நடத்துவதற்காக சேதுபதியின் முதன்மை குருக்களாக நியமனம் செய்து கட்டளையிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          இராமநாத சுவாமிக்கு உச்சிக்காலம், திருவனந்தல், அபிசேகம், பூசை நைவேத்திய ஆகியவைகளை முறையாக நிறைவேற்றி வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள சேமனூர், முகிழ்த்தகம், நிலமழகிய மங்கலம், சின்னத்தொண்டி ஆகிய நான்கு கிராமங்களையும், மற்றும் மன்னர் வழங்கியுள்ள திருவாபரணம், பட்டு, பருத்தி, வெள்ளி வாகனங்கள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் இதர சம்பத்துக்களையும் குருக்கள் பொறுப்பேற்று, இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கலியாணம் உற்சவம், மாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற வேண்டிய உற்சவங்களுக்கு காப்பு தரித்து, துவஜ ஆரோகணம் செய்து விழாக்களை முறையாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது மன்னரது கட்டளை. இவைகளை நடத்தி வைப்பதற்காக குருக்களுக்கு சில மரியாதைகளையும் சலுகைகளையும் மன்னர் வழங்கி இருந்தையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, இராமநாதசுவாமி கோயில், இராமலிங்கவிலாசம், அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / ரகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a கி.பி.1678
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
995 : _ _ |a TVA_CPS_00093
barcode : TVA_CPS_00093
book category : சேதுபதி
cover :
Primary File :

26-1.jpg

26-2.jpg

26-3.jpg

26-4.jpg

26-5.jpg